8 Auspicious Temples to Overcome Marriage Obstacles: A Complete Guide
ஜாதகத்தில் கிரகங்கள் சாதகமாக இல்லாதபோது, நாம் எடுக்கும் முயற்சிகள் கைகூடுவதில்லை. குறிப்பாக மிதுன லக்கினம், மேஷ ராசி மற்றும் 7-ல் செவ்வாய்/சுக்கிரன் உள்ளவர்களுக்கு திருமணப் பேச்சுகள் தள்ளிப்போகலாம். இதோ அந்தத் தலங்களின் சூட்சும ரகசியங்கள்:
When planets are not favorably placed in your horoscope, efforts often go in vain. Especially for those with Mithuna Lagna, Mesha Rasi, or Mars/Venus in the 7th house, marriage talks might face delays. Here are the mystical secrets of these powerful parihara sthalas:
1. சுவாமிமலை முருகன் (Swamimalai Murugan)
- ஏன் செல்ல வேண்டும்? (Why visit?): செவ்வாய் திசை அல்லது புத்தி நடப்பவர்களுக்கு செவ்வாயின் வேகம் அதிகமாக இருக்கும். இது தேவையற்ற பிடிவாதம் அல்லது கோபத்தைத் தரும்.
- For those undergoing Mars (Sevvai) Dasa or Bhukti, the intensity of Mars can cause stubbornness or anger, delaying harmony.
- தன்மை (Nature): குருவாக இருந்து தந்தைக்கே உபதேசம் செய்த தலம் (The place where the Son became the Teacher to his Father).
- பலன் (Benefit): இங்கு வழிபடும்போது செவ்வாயின் வேகம் குறைந்து, ‘விவேகம்’ பிறக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் நிதானம் ஏற்படும்.
- Worshiping here balances Mars’ energy with wisdom, ensuring calm and successful marriage negotiations.
2. பட்டீஸ்வரம் துர்க்கை (Patteeswaram Durga)
- ஏன் செல்ல வேண்டும்? (Why visit?): ராகு 5-ல் இருப்பவர்களுக்கும், ராகுவின் பிடியில் சந்திரன் (மனம்) சிக்கியிருப்பவர்களுக்கும் ராகுவின் தாக்கம் திருமணத்தைத் தடுக்கும்.
- If Rahu is in the 5th house or afflicting the Moon, it creates mental hurdles and delays in marriage.
- தன்மை (Nature): சாந்த சொரூபிணி, ராகு கால நாயகி (The peaceful Goddess of Rahu Kaalam).
- பலன் (Benefit): ராகுவினால் ஏற்படும் தடைகள், கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். சரியான வரன் அமைய வழிவகுக்கும்.
- Removes Rahu-related obstacles, evil eye, and negativity, leading you to the right life partner.
3. திருநாரையூர் சனீஸ்வரர் (Thirunarayur Saneeswarar)
- ஏன் செல்ல வேண்டும்? (Why visit?): சனி பகவான் ஜாதகத்தில் 7-ஆம் இடத்தைப் பார்த்தாலோ அல்லது ஏழரைச் சனியின் தாக்கம் இருந்தாலோ திருமணம் தாமதமாகும்.
- Marriage is often delayed if Saturn aspects the 7th house or during the Sade Sati period.
- தன்மை (Nature): தன் மனைவி, குழந்தைகளுடன் ‘குடும்ப சனீஸ்வரராக’ அருள்பாலிக்கும் ஒரே தலம்.
- The only temple where Saturn appears as a ‘Family Man’ with his wife and children.
- பலன் (Benefit): சனியின் கெடுபலன்கள் குறைந்து, குடும்ப வாழ்க்கை சுமுகமாக அமையப் பாதை வகுக்கும்.
- Reduces the malefic effects of Saturn and paves the way for a smooth family life.
4. திருப்பாம்புரம் ராகு-கேது (Thirupamburam Raghu-Kethu)
- ஏன் செல்ல வேண்டும்? (Why visit?): சர்ப்ப தோஷம் அல்லது ராகு-கேதுவால் திருமணத் தடை இருப்பவர்களுக்கு இதுவே இறுதித் தீர்வு.
- The ultimate solution for those facing delays due to Sarpa Dosha or Rahu-Ketu afflictions.
- தன்மை (Nature): ராகுவும் கேதுவும் ஏக சரீரமாக (ஒரே உடலாக) இருந்து சிவனை வழிபட்ட தலம்.
- The holy site where Rahu and Ketu worshiped Lord Shiva as a unified body.
- பலன் (Benefit): கடுமையான சர்ப்ப தோஷங்கள் விலகும். வரன் பார்ப்பதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, மனத் தெளிவு கிடைக்கும்.
- Clears severe Sarpa Doshas and provides mental clarity in choosing the right alliance.
5. திருச்சிறுகுடி மங்கலேஸ்வரர் (Thiruchirukudi Mangaleshwarar)
- ஏன் செல்ல வேண்டும்? (Why visit?): செவ்வாய் 7-ல் இருப்பவர்களுக்கு (செவ்வாய் தோஷ விலக்கு பெற்றிருந்தாலும்) செவ்வாயின் உக்கிரம் திருமணப் பிணைப்பைத் தடுக்கும்.
- Even if Dosha exemption exists, Mars in the 7th house can create intensity that blocks the marital bond.
- தன்மை (Nature): செவ்வாய் பகவான் சாபம் நீங்கி “மங்களன்” (சுபமானவர்) ஆன தலம். இங்குதான் “எண் 40” சூட்சும யந்திரம் உள்ளது.
- Where Mars was relieved of his curse to become ‘Mangalan’ (The Auspicious). Home to the mystical ‘Number 40’ Yantra.
- பலன் (Benefit): செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும். திருமணத்திற்குப் பின் அந்தஸ்து மற்றும் பொருளாதார உயர்வு கிடைக்கும்.
- Softens the impact of Mars and brings social status and financial growth after marriage.
6. திருவீழிமிழலை கல்யாணசுந்தரேஸ்வரர் (Thiruvizhimizhalai)
- ஏன் செல்ல வேண்டும்? (Why visit?): லக்கினாதிபதி புதன் பலமிழந்து இருந்தாலோ அல்லது திருமண உறுதி (Commitment) கிடைப்பதில் சிக்கல் இருந்தாலோ இங்குச் செல்ல வேண்டும்.
- Visit here if Mercury (Lagnadhipati) is weak or if you face issues in getting a firm commitment (Betrothal).
- தன்மை (Nature): மகாவிஷ்ணுவே சிவனை வழிபட்ட தலம். மாப்பிள்ளை சுவாமியாக இறைவன் வீற்றிருக்கும் தலம்.
- Where Lord Vishnu worshiped Shiva. The Lord resides here in the form of a Bridegroom.
- பலன் (Benefit): இது ‘திருமண உறுதி தலம்’. இங்குச் சென்று திரும்பிய சில நாட்களிலேயே நிச்சயம் நடக்கும் என்பது அனுபவ உண்மை.
- The ‘Temple of Commitment.’ It is a proven fact that engagement follows shortly after visiting this shrine.
7. கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி (Keelaperumpallam – Kethu Temple)
- ஏன் செல்ல வேண்டும்? (Why visit?): ஜாதகத்தில் கேது பகவான் பாதகமாக இருந்தாலோ அல்லது திருமணத்தில் பிடிப்பில்லாமல் இருந்தாலோ இத்தலம் அவசியம்.
- Essential if Ketu is unfavorably placed or if the individual lacks interest/attachment toward marriage.
- தன்மை (Nature): கேது பகவான் சிவனை நோக்கித் தவமிருந்து அனுக்கிரகம் பெற்ற தலம்.
- The place where Lord Ketu performed penance and received blessings from Lord Shiva.
- பலன் (Benefit): கேதுவினால் ஏற்படும் தடைகள் மற்றும் முன்னோர் வழி சாபங்கள் நீங்கும். தெளிவான சிந்தனையும் நல்ல துணையும் அமையும்.
- Removes Ketu-related hurdles and ancestral curses, providing spiritual strength and a good partner.
8. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் (Thiruvenkadu – Budhan Temple)
- ஏன் செல்ல வேண்டும்? (Why visit?): லக்கினாதிபதி புதன் 6-ல் மறைந்தாலோ அல்லது ஜாதகத்தில் பலவீனமாக இருந்தாலோ பேச்சுவார்த்தைகளில் சிக்கல் ஏற்படும்.
- If Mercury is hidden in the 6th house or weak, communication issues will arise. Visit this last in your pilgrimage.
- தன்மை (Nature): ஆதி சிதம்பரம் என்று போற்றப்படும் தலம். புதன் பகவான் விசேஷமாக அருள்பாலிக்கும் தலம்.
- Known as Adi Chidambaram, where Mercury (Budhan) bestows special blessings.
- பலன் (Benefit): புத்தி காரகனாகிய புதன் பலம்பெறுவார். திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.
- Strengthens Mercury, ensuring successful negotiations and a deep understanding with your spouse.
விசேஷ வழிகாட்டுதல் (Special Rules):
- நட்சத்திர அர்ச்சனை (Star Archana): தெய்வத்தின் பெயரில் செய்யாமல், உங்கள் நட்சத்திரப் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள்.
- Perform the Archana in your Birth Star (Nakshatra) rather than the deity’s name to align your energy with the universe.
- மண் விளக்கு (Earthen Lamps): ஒவ்வொரு கோவிலிலும் 2 மண் விளக்குகள் ஏற்றி, அங்கேயே சில மணிநேரம் அமைதியாக அமர்ந்திருங்கள்.
- Light 2 earthen lamps in every temple and spend some time in silent meditation there.
- கோனேரிராஜபுரம் (Special Note): நிலம் சார்ந்த சிக்கல் அல்லது அதீத மன அழுத்தம் இருந்தால் மட்டும் இங்குச் சென்று சுயம்பு உமாமகேஸ்வரரை வழிபடவும்.
- Visit Konerirajapuram only if you face land disputes or extreme mental stress.
திருமண பரிகார தலங்கள், கும்பகோணம் பரிகார யாத்திரை, செவ்வாய் தோஷ நிவர்த்தி, ராகு கேது தோஷ வழிபாடு, திருச்சிறுகுடி 40 எண் ரகசியம், வராகி ஆஸ்ட்ரோ திருமண ஆலோசனை, புதன் தலம் திருவெண்காடு, கீழப்பெரும்பள்ளம் கேது வழிபாடு.